இழப்பீடு வழக்கில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீர்ப்பிற்கு முன் பற்றுகை (ஜப்தி) (ABJ) செய்ய முடியுமா?

Posted by Admin April 27, 2020

இயக்கூர்திகள் சட்டம் (59/1988), பிரிவு 169 - உரிமையியல் நடைமுறை சட்டம், கட்டளை 38, விதி 5; கட்டளை 41, விதி 23-A. -

வழக்கின் சங்கதிகள்படி, விபத்து ஏற்படுத்திய 'டிராக்டர் மற்றும் ட்ரைலர்'  வாகன உரிமையாளர் மீது இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்படுகிறது. அத்துடன் அந்த வாகனத்தை 'தீர்ப்பிற்கு முன் பற்றுகை' (Attachment before judgment) செய்யவும் மனு தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு மனு தாக்கல் செய்ய முடியுமா எனும் கேள்வி ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன் எழுந்த போது, உரிமையியல் நடைமுறை சட்டத்தின் கட்டளை 38, விதி 5-இல் கண்ட வகைமுறைகள் (தீர்ப்பிற்கு முன் பற்றுகை செய்வது குறித்த நடைமுறைகளைக் கூறுவது), இயக்கூர்திகள் சட்டத்தின் கீழான நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் என்று நிலை நிறுத்தப்பட்டது.

எனவே, விபத்து வழக்குகளில் இழப்பீட்டிற்கான முடிவான தீர்வம் பகரப்படுவதற்கு முன்னதாக அத்தீர்வத் தொகையை பின்னிட்டு வசூலிப்பதற்கு உதவிகரமாக இருப்பதற்காக சம்பந்தப்பட்ட வாகனத்தை பற்றுகை (ஜப்தி) செய்யலாம். தீர்வத்திற்கு பிறகு அவ்வாகனத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

(Duvvuru Siva Kumar Reddy and etc. v. Malli Srinivasulu and etc.)

Most Relevant Product

Mega Combo Sales - 5 GUIDES in ONE PACK for TN Government Departmental Exam - தமிழ்நாடு அரசுத் துறை தேர்வுகளுக்கான 5 துணைவன் கள்

Supreme Court on Criminal Law | 2015-2023 | Landmark Cases | Including Directions & Guidelines Laid Down by the Supreme Court | Latest Edition 2023 | A Rare Compendium on the subject |

Tamil Nadu Societies Registration Act 1975 and Rules 1978 in TAMIL / தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 (தமிழ்நாடு சட்டம் 27/1975 & தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகள், 1978)

Tamil Nadu Private Schools (Regulation) Act 2018 & Rules 2023 | தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம் 2018 மற்றும் விதிகள் 2023 | சட்டம் மற்றும் புதிய விதிகளுடன் மேலும் பல சட்ட திட்டங்கள் அடங்கிய நூல் | இப்போது பரபரப்பான விற்பனையில்....

உரிமையியல் நீதிபதி, அரசு உதவி வழக்குரைஞர் & மாவட்ட நீதிபதி முதனிலைத் தேர்வு கையேடு (முந்தைய தேர்வு தாள் வினா-விடைகள், முக்கிய சட்டங்களிலிருந்து பன்மத்தெரிவு வினா விடைகள்) Judge and APP Preliminary Exam Guide - Previous Year Q & A and MCQ's on certain important Acts)

தொழிலாளர் உரிமை காக்கும் தீர்ப்புகள் (தொகுதி 1) / 117 முக்கிய தீர்ப்புகள் / Judgments protecting the rights of labours in TAMIL - Volume 1