APP தேர்வுக்காக TNPSC வெளியிட்டுள்ள முக்கிய செய்திக்குறிப்பு ! தேர்வர்கள் கவனமாக குறித்துக்கொள்ள வேண்டிய 4 அறிவுரைகள் வெளியீடு !!

Posted by Admin October 26, 2021

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை செய்த APP பதவிக்கான எழுத்துத் தேர்வு (முதல் நிலை) வருகின்ற 06-11-2021-ம் தேதியன்று முற்பகலில் 05 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

அது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று (26-10-2021) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பின்வரும் நான்கு அறிவுரைகளை கவனமாக குறித்துக் கொள்ளும்படி APP தேர்வு எழுத செல்லும் விண்ணப்பதாரர்களை தேர்வாணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அவை,

(1) தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை பந்து முனை பேணா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் அவ்வாறான விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும்.

(2) எந்த ஒரு தேர்வரும் முற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 09.15 மணிக்கு பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 12.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

(3) விண்ணப்பதாரர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை எளிதில் தெரிந்து கொள்ளும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுசீட்டில், விரைவுத்தகவல் குறியீடு (QR Code) அச்சிடப்பட்டுள்ளது. இதனை விரைவுத்தகவல் குறியீட்டு செயலி மூலம் ஸ்கேன் செய்து தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை Google Maps மூலமாக தெரிந்து கொண்டு பயன் பெறலாம்.

(4) தேர்வு அறைக்குள் அலைபேசியை கொண்டுசெல்ல அனுமதியில்லை. எனவே விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் உள்ள குறிப்பின்படி தங்களது அலைபேசி உட்பட பிற உடைமைகளை தேர்வு மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும் சொந்த உடைமைகளை பாதுகாப்பு அறையில் வைப்பது தேர்வரின் சொந்த பொறுப்பிற்குட்பட்டதாகும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Most Relevant Product

உரிமையியல் நீதிபதி, அரசு உதவி வழக்குரைஞர் & மாவட்ட நீதிபதி முதனிலைத் தேர்வு கையேடு (முந்தைய தேர்வு தாள் வினா-விடைகள், முக்கிய சட்டங்களிலிருந்து பன்மத்தெரிவு வினா விடைகள்) Judge and APP Preliminary Exam Guide - Previous Year Q & A and MCQ's on certain important Acts)

Civil Judge 2023 Main Examination Latest Study Materials in Tamil and English Volume I and II | புதுச்சேரி 2023 தேர்வுக்கான வினாத்தாள் விடைகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது | 1997, 1998, 1999, 2000, 2002, 2003, 2008, 2012, 2014, 2018, 2020 and 2023 Question papers and Descriptive answers with study materials for subjects |

Objective Type MCQ on LIMITATON ACT in TAMIL AND ENGLISH (காலவரையறை சட்டத்தில் பன்மத் தெரிவு வினாக்கள்) - Useful for civil judge and judicial magistrate

Guide in TAMIL for various posts by Madras High Court Recruitment | மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்புப் பிரிவு) | பல்வேறு பதவிகளுக்கான தேர்வுக் கையேடு | Latest 2024

ASSISTANT PUBLIC PROSECUTOR (APP - Grade II) Preliminary Exam Guide in English / Study Materials & Objective type Q & A - குற்றத்துறை உதவி வழக்குரைஞர் தேர்வுக்கு புதிய கையேடு

Criminal Procedure Code - Objective Type Q&A/Multiple Choice for District Judge/Civil Judge/APP Exams by TNPSC (TAMIL) (குற்றவியல் விசாரணை முறை சட்டம் - பன்மத் தெரிவு மற்றும் கொள்குறி வினாக்கள் - மாவட்ட நீதிபதி/உரிமையியல் நீதிபதி/அரசு குற்றத்துறை வழக்குரைஞர் தேர்வுக்கு புதிய புத்தகம்)