மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவில் (MHC Recruitment 2025)
- சோப்தார் (Chobdar),
- அலுவலக உதவியாளர் (Office Assistant),
- வீட்டு உதவியாளர் (Residential Assistant),
- ரூம் பாய் (Room Boy),
- தூய்மைப்பணியாளர் (Sweeper),
- தோட்டப்பணியாளர் (Gardener),
- வாட்டர்மேன் (Waterman),
- சுகாதாரப்பணியாளர் (Sanitary Worker),
- காவலர் (Watchman)
ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அண்மையில் செய்யப்பட்ட விளம்பரப்படியிலான தேர்வுக்கென வடிவமைக்கப்பட்ட கையேடு இது.
இதில் பகுதி அ-வில் பொதுத் தமிழ் பாடத்திற்கான (தமிழ் மொழி தகுதித் தேர்வு) பாடங்கள், மாதிரி வினாத்தாள், கொள்குறிவகை வினா விடைகள் ஆகியன தரப்பட்டுள்ளன. இதையடுத்து பகுதி ஆ-வில் பொது அறிவு பாடத்திற்கான பாடங்கள் தரப்பட்டுள்ளன. இதில்
- (1) வீட்டு பராமரிப்பு முறைகள் மற்றும் சுகாதாரம்,
- (2) உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுதல் பற்றிய பொது அறிவு,
- (3) சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள்
- (4) அலுவலக பராமரிப்பு
- (5) தோட்டக்கலை உபகரணங்களை கையாளுதல் மற்றும் பராமரிப்பு செய்யும் முறைகள்
- (6) நீர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு
- (7) வீடு மற்றும் அலுவலகம் பராமரிக்கும் காவலாளியின் அடிப்படைக் கொள்கைகள்,
- (8) அடிப்படைக் கணிதத் திறன்
- (9) நடப்பு நிகழ்வுகள்
- (10) மத்திய மாநில அமைச்சரவை
ஆகிய தலைப்புகளில் விளக்கங்களும் பயிற்சி வினாக்களும் தரப்பட்டுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக முந்தைய தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் தரப்பட்டிருப்பது இத்தேர்வு எழுதுவோருக்கு நல்லதொரு புரிதலைத் தரக்கூடியதாகும். அந்த வகையில், இந்த கையேட்டில்
- (1) 2024 ஆம் ஆண்டு (10-11-2024) தேர்வு வினாத்தாள் விடைகளுடனும்,
- (2) 2021ஆம் ஆண்டு (31-07-2021) தேர்வு வினாத்தாள் (அலுவலக உதவியாளர்) விடைகளுடனும்,
- (3) 2019 ஆம் ஆண்டு (20-07-2019) தேர்வு வினாத்தாள் (வீட்டு உதவியாளர் - Residential Assistant) விடைகளுடனும்,
- (4) 2019 ஆம் ஆண்டு (21-07-2019) தேர்வு வினாத்தாள் (தோட்டப்பணியாளர்) விடைகளுடனும்,
- (5) 2019 ஆம் ஆண்டு (22-09-2019) தேர்வு வினாத்தாள் (உதவியாளர், நகல் பிரிவு உதவியாளர்) விடைகளுடனும்,
- (6) 2018 ஆம் ஆண்டு (08-04-2018) தேர்வு வினாத்தாள் (இளநிலை நிர்வாக உதவியாளர்) விடைகளுடனும்,
- (7) 2018-ஆம் ஆண்டு (04-02-2018) தேர்வு வினாத்தாள் (அலுவலக உதவியாளர்) விடைகளுடனும்
- (8) 2017ஆம் ஆண்டு (08-10-2017) தேர்வு வினாத்தாள் (துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மை பணியாளர்) விடைகளுடனும் தரப்பட்டுள்ளன.
மேற்கண்ட பணியிடங்களுக்கான தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு இந்தக் கையேடு ஓர் சிறந்த வழிகாட்டியாகும்.
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள் ! வாழ்க வல்லமையுடன் !!
- ஸ்ரீ பதி ராஜன் பப்ளிசர்ஸ்.