தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்து கழகங்களில் 25 மண்டலங்களில் ஓட்டுநர் உடன் நடத்துனருக்கான 3274 பணியிடங்களுக்கு, தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான தேர்வை எழுதுவதற்கு உதவிகரமாக இந்தக் கையேடு வெளியாகியுள்ளது. அத்தேர்வுக்கான பாடத் திட்டத்தின் அடிப்படையில் பின்வரும் மூன்று பகுதிகளின் கீழ் விளக்கமான பாடங்கள், கொள்குறி வகை வினா விடைகள், மாதிரி வினாத்தாள் விடைகளுடன் இந்த கையேட்டில் தரப்பட்டுள்ளன. அம்மூன்று பகுதிகள் வருமாறு
எல்லாவற்றுக்கும் மேலாக, இத்தேர்வு குறித்த ஓர் தெளிவான புரிதலை உருவாக்கும் முகமாக முந்தைய ஆண்டின் அதாவது 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்வு வினாத்தாள் விடைகளுடன் இதில் தரப்பட்டுள்ளது.
3274 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த தேர்வில், சற்றே முயன்றால் வெற்றி பெற்று விடலாம். அதற்கு இந்தக் கையேடு நிச்சயம் வழிகாட்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
தேர்வில் வெற்றி பெற நல்வாழ்த்துகள் ! வாழ்க வல்லமையுடன் !!
- ஸ்ரீ பதி ராஜன் பப்ளிசர்ஸ்.